வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (15:08 IST)

50 லட்சம் பேர் எழுதிய காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து.. அதிர்ச்சியில் விண்ணப்பதாரர்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் எழுதிய காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது என்பது இதில் சுமார் 50 லட்சம் பேர்களுக்கும் மேல் இந்த தேர்வை எழுதியதாக மாநில அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் உத்தரப்பிரதேசம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 60 ஆயிரம் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்த நிலையில் தேர்வுக்கு முன்னர் வினாத்தாள் கசிந்து சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் தான் தற்போது காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடத்தவும் உத்தர பிரதேசம் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Edited by Mahendran