வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (09:16 IST)

7 உயிர் அண்டர்டேக்கரின் கடைசி சர்வைவர் சிரிஸ்! – வருத்தத்துடன் வழியனுப்பிய ரசிகர்கள்!

WWF போட்டியின் மூலம் உலக பிரபலமாக இருந்த அண்டர்டேக்கர் கடைசியாக சர்வைவர் சிரிஸுடன் ரெஸ்லிங் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

புகழ்பெற்ற WWF ரெஸ்லிங் போட்டிகளில் கடந்த 30 ஆண்டு காலமாக உலக புகழ்பெற்றவராக இருந்து வருபவர் அண்டர்டேக்கர் என புகழ்பெற்ற மார்க் வில்லியம் கலாவே. 90ஸ் கிட்ஸ் மத்தியில் அண்டர்டேக்கருக்கு 7 உயிர் உண்டு என்ற நம்பிக்கை மிகப்பிரபலம். 1990 முதல் கடந்த 30 ஆண்டு காலமாக ரெஸிலிங்கில் இருந்து வரும் அண்டர்டேக்கர் கடந்த ஜூலை மாதம் தனது ஓய்வை அறிவித்தார்.

எனினும் தொடர்ந்து சில போட்டிகளில் பங்குபெற்ற அண்டர்டேக்கருக்கு மரியாதை செய்யும் விதமாக சர்வைவர் சிரிஸ் ஒன்று நடத்தப்பட்டது. அதில் விளையாடி முடித்த அண்டர்டேக்கருக்கு ரசிகர்கள் கோலகலமாக கத்தி, கரகோஷங்கள் எழுப்பி மரியாதை செய்தனர். அண்டர்டேக்கர் ஓய்வு குறித்து இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் தனது மரியாதைகளை அவருக்கு செலுத்தியுள்ளார்.