இது ஆகாது.. டிக்கெட்டை குடுத்து பணத்தை வாங்கிகோங்க! – ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு!
ஜப்பானில் இந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக தடைபட்டதால் டிக்கெட் பணத்தை திரும்ப தருவதாக ஒலிம்பிக் வாரியம் அறிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற இருந்தது. இதற்காக பல கோடி செலவு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ஒட்டு மொத்த உலகமும் முடங்கியது. இதனால் ஒலிம்பிக் போட்டிகளை திட்டமிட்ட நாளில் இருந்து சில மாத காலம் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
டிக்கெட்கள் ஏற்கனவே விற்று தீர்ந்த நிலையில் போட்டிகளையும் நடத்த முடியாததால் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஒலிம்பிக் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்ப தருவதாக ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை நவம்பர் 10 முதல் 30 தேதிக்குள் அளித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும், பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்டை டிசம்பர் 1 முதல் 30ம் தேதிக்குள் திரும்ப கொடுத்து பணத்தை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.