செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (09:36 IST)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்! – குவியும் வாழ்த்துக்கள்!

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தமிழக வீரர் இடம்பெற்றுள்ளார்.

டோக்கியோவில் கடந்த ஆண்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ள பல்வேறு விளையாட்டு பிரிவுகளின் வீரர்கள் பெயர் வெளியாகி வருகிறது. அதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு பிரிவில் இந்தியா சார்பில் விளையாட தமிழக வீரரான சத்யன் ஞானசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி பல விருதுகளை பெற்றுள்ள சத்யன் இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய அர்ஜூனா விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.