வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (22:25 IST)

9 ஓவர்களில் 66 ரன்கள், 3 விக்கெட்டுக்கள்: இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது 186 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது அந்த அணி சற்று முன் வரை 13 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் 7 ஓவர்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் 86 ரன்கள் இலக்காக இருக்கும் நிலையில் அந்த இலக்கை இங்கிலாந்து எட்டிவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இப்போதைய நிலையில் நிலவரப்படி இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது