திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (15:39 IST)

எந்த உபகரணங்களும் இல்லாமல் வந்தான் வென்றான்… ஒலிம்பிக்ஸைக் கலக்கிய துருக்கி வீரர்!

பாரிஸில் தொடங்கி நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று ஏழு மாத கர்ப்பிணி பெண் வாள்வீச்சு போட்டியில் விளையாடி உலகின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து இப்போது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துருக்கி நாட்டு வீரர் டிகேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதற்குக் காரணம் அவர் துப்பாக்கிச் சுடுதலின் போது எந்தவிதமான உதவி உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை.

பொதுவாக துப்பாக்கிச் சுடும் வீரர்கள் இலக்கைத் துல்லியமாகக் காண லென்ஸ் ஒன்றை பயன்படுத்துவார்கள். அதே சத்தத்தைத் தவிர மற்றொரு உபகரணத்தையும் பயன்படுத்துவார்கள். ஆனால் இவர் எந்த உபகரணங்களும் அணியாமல் வந்து சுட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.