ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (12:12 IST)

இந்திய வீரரின் வெற்றி செல்லாது என அறிவித்த ஒலிம்பிக் கமிட்டி – வலுக்கும் கண்டனம்!

பாரிஸில் தொடங்கி நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். அவர்களில் யாரும் இன்னும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய பேட்மிண்ட்டன் வீர்ர லக்‌ஷ்யா சென் முதல் சுற்றில் குவாதலாமா வீரர் கெவின் கார்டனை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் லக்‌ஷ்யா சென் 21-8, 22-20 ஆகிய நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

ஆனால் கெவின் கார்டன் காயம் காரணமாக இப்போது ஒலிம்பிக் தொடரில் இருந்தே வெளியேறிவிட்டதால் லக்‌ஷ்யா சென் பெற்ற வெற்றி செல்லாது என ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த முடிவு அவர் அடுத்த சுற்றுக்கு செல்வதில் பாதிப்பை ஏற்படுத்துமென்பதால் இந்திய ரசிகர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த முடிவை சர்வதேச பேட்மிண்ட்டன் கூட்டமைப்பின் விதிகளின் படி எடுத்துள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.