திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (09:32 IST)

வயிற்றில் 7 மாத குழந்தை.. வாள் பிடித்து நின்ற வீர பெண்மணி! - பாரிஸ் ஒலிம்பிக்ஸில் நெகிழ்ச்சி சம்பவம்!

பாரிஸில் தொடங்கி நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். அவர்களில் யாரும் இன்னும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒலிம்பிக் தொடரில் வாள்வீச்சு பிரிவில் கலந்துகொண்டுள்ள எகிப்து நாட்டைச் சேர்ந்த நாடா ஹபீஸ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதற்குக் காரணம் அவர் 7 மாத கர்ப்பிணியாக இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளதுதான்.

இது சம்மந்தமாக நாடா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் மூன்று பேர். ஒன்று நான், இன்னொன்று என்னை எதிர்த்து விளையாடிய வீராங்கனை. மூன்றாவது இன்னும் உலகத்தைக் காணாத என் குழந்தை” எனத் தெரிவித்துள்ளார்.