ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (14:31 IST)

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம்.! பிரதமர் மோடி வாழ்த்து..!!

India Won
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெணகலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
 
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கடந்த 26ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றிருந்தது. துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.
 
இந்தியாவிற்காக முதல் பதக்கம் வென்று கொடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்தார்.  இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இதில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடியானது கொரியா ஜோடியை எதிர்கொண்டது. இந்தியா 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் குவித்துள்ளது. இதன் மூலமாக இந்தியா 2ஆவது வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளது.
 
Modi
பிரதமர் மோடி வாழ்த்து:
 
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து பெருமைப்படுத்துகிறார்கள் என்றும் வெண்கலம் வென்ற மனுபாகர் - சரப்ஜோத் சிங் ஜோடிக்கு வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது என்றும் மனுவைப் பொறுத்தவரை, அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம், இது அவரது சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.