புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 9 செப்டம்பர் 2021 (19:28 IST)

இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி ரத்தா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை நான்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று உள்ளது என்பதும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது
 
இந்த நிலையில் இந்தியா இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஒரு போட்டி டிராவில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாளை இந்தியா - இங்கிலாந்து நாடுகளின் அணிகளுக்கு இடையிலான 5-வது கிரிக்கெட் போஸ்ட் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டி நடைபெறுவதில் சந்தேகம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தகவல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்திய அணியின் பிசியோதெரபி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று நடைபெற இருந்த பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது எனவே நாளைய டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது ஒருவேளை ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது