செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:58 IST)

தமிழ் பண்பாட்டை தேடி இந்தியாவெங்கும் ஆய்வு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியா முழுவதும் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சபுரம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் பல இடங்கள் பல தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “கீழடி அகழ்வாய்வு உலகத்தையே தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியா முழுவதும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள மாநிலம் பட்டணம், ஆந்திராவின் வெங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசாவின் பாலூர் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.