1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 50 thousand

ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலைமை!

India
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,31,39,981 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,41,749 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,23,04,618 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,93,614 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
கூச்சப்படாம சாப்பிடுங்க.. கொஞ்சம் மட்டன் வைக்கவா? – ஒலிம்பிக் வீரர்களுக்கு உணவு சமைத்த முதலமைச்சர்!