செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 11 மே 2023 (08:23 IST)

தொடர்ச்சியாக 3 தோல்விகள்.. ராஜஸ்தானுக்கு இன்று வெற்றி கிடைக்குமா?

Rajasthan Royals
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. 
 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு பார்வையாளர்களின் ஆதரவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ராஜஸ்தான் அணி வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்று ஆக வேண்டிய நிலை உள்ளது. 
 
மும்பை, குஜராத் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது 
 
கொல்கத்தா அணியும் 10 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி நான்காவது இடத்திற்கு சென்று விடும் என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 
3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த ராஜஸ்தானுக்கு இன்று வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Siva