சிஎஸ்கே அபார வெற்றி.. தோல்வியால் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது டெல்லி..!
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது. ஆனால் நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
நேற்றைய வெற்றியின் மூலம் 15 புள்ளிகள் பெற்ற சிஎஸ்கே அணி, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் நேற்றைய தோல்வி காரணமாக டெல்லி அணி அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இதுவரை 7 தோல்விகளை அடைந்திருக்கும் டெல்லி அணி அடுத்து வரும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும் என்பதால் பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு இல்லை என்று வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்
Edited by Siva