வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 மே 2023 (18:34 IST)

மே 14ல் சென்னை-கொல்கத்தா போட்டி.. டிக்கெட் விற்பனை குறித்த சிஎஸ்கேவின் அறிவிப்பு..

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சென்னை அணியுடன் கொல்கத்தா வரும் மே 14ஆம் தேதி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் முதல்  தொடங்கும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வரிசை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காலை 10:30 மணி முதல் 11 மணி வரை டிக்கெட்டுக்களை பெறலாம் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran