1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 மே 2023 (09:17 IST)

திடீர் ஃபார்முக்கு வந்த டெல்லி..! சிஎஸ்கேவிடம் பாட்சா பலிக்குமா? – இன்று CSK vs DC மோதல்!

CSK Vs DC
இன்றைய ஐபிஎல் போட்டியில் திடீர் ஃபார்முக்கு வந்த டெல்லி அணியும், அல்ரெடி நல்ல ஃபார்மில் உள்ள சிஎஸ்கே அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது.

ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி வருகின்றன. 16 பாயிண்டுகள் அனைத்து அணிகளுக்கும் பொது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பாயிண்ட்ஸ் டேபிளில் அணிகள் ஒவ்வொன்றும் மல்லுக்கட்டி வருகின்றன. இதில் ஆரம்பம் முதலே பல தோல்விகளை சந்தித்த சன்ரைசர்ஸ், டெல்லி அணிகள் பாயின்ட்ஸ் டேபிளின் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி டெல்லி 16 பாயிண்டுகள் பெற மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். சென்னை அணி தனக்குள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டும். சென்னை அணிக்கான மீதமுள்ள 3 லீக் போட்டிகளில் இரண்டு போட்டிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ் உடன் உள்ளது. அதன் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

David Warner


கடந்த சில போட்டிகளாக திடீரென நல்ல ஃபார்முக்கு வந்த டெல்லி அணி குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி போன்ற அணிகளையே வீழ்த்தி பாயிண்ட்ஸ் டேபிளை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் இன்று சிஎஸ்கேவுடன் மோத போகும் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சென்னை அணிக்கும் ஹோம் க்ரவுண்ட் மேட்ச் என்பதால் சிஎஸ்கே மிக நேர்த்தியான ஆட்டத்தை முன் வைப்பார்கள். சிஎஸ்கேவின் ரஹானே, ஷிவம் துபே, ஜடேஜா உள்ளிட்டோர் தொடர்ந்து கலக்கி வருகின்றனர். பவுலிங்கில் துஷார் தேஷ்பாண்டே, பதிரனா, ஜடேஜா என விக்கெட் எடுக்கக்கூடிய ஆட்கள் உள்ளனர்.

Dube


டெல்லி அணியை பொறுத்த வரை கடந்த சில போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான பில் சால்ட் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரும் வார்னரும் பார்ட்னர்ஷிப் செய்தால் அல்லது மிடில் ஆர்டரில் வரும் மிட்ஷல் மார்ஷ், ரிலி ரொசோ போன்றவர்களின் பெர்பார்மன்ஸ் கொண்டு பார்த்தால் 180+ வரை சேஸிங் அல்லது டார்கெட் செட் செய்ய முடியும். ஆனால் டெல்லியின் முதல் 4 விக்கெட்டுகள் எளிதில் வீழ்ந்து விட்டால் இலக்கு இதை விடவும் குறைவாக வாய்ப்புண்டு. சிஎஸ்கேவுக்கு தனது ஹோம் க்ரவுண்டில் இது சிறிய இலக்காகவே இருக்கும்.

இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சிஎஸ்கேவின் ப்ளேஆப் தகுதிக்கு அவசியமான போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.