1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 அக்டோபர் 2021 (07:23 IST)

இன்று ஐபிஎல் இறுதி போட்டி: கோப்பையை வெல்வது யார்?

இன்று ஐபிஎல் இறுதி போட்டி: கோப்பையை வெல்வது யார்?
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் கோப்பையை வெல்லும் அணி எது என்பதை காண கோடிக்கணக்கான ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரில் ஆரம்பத்திலிருந்தே அசத்தி வரும் சென்னை அணியும், கடைசி நேரத்தில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கொல்கத்தாவுக்கு நடைபெற இருக்கும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே 3 முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை மீண்டும் ஒரு முறை கோப்பையை கைப்பற்றுமா? அதேபோல ஏற்கனவே இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தாவுக்கு மூன்றாவது முறை கோப்பை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற சென்னை அணியின் பயிற்சியாளர் கிளர்மின் கேப்டன் தோனி ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.