வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (15:42 IST)

ஸ்டீவ் வாஹ்க்குப் பின் டிம் பெய்ன்தான் – ஆஷஸ் கோப்பையை எடுத்துச் செல்லும் ஆஸ்திரேலியா !

இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவுக்குக் கோப்பையை எடுத்துச் செல்லும் என்னும் பெருமையை கேப்டன் டிம் பெய்ன் தலைமையிலான அணி பெற்றுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியக் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கபப்ட்ட பின் அந்த பதவி டிம் பெய்ன் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஆஸி டெஸ்ட் அணியை வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான அணி பல போட்டிகளில் தோல்வியடைந்ததாலும் அவரது பேட்டிங் திறன் மோசமானதற்காகவும் அவர் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை  வென்றதை அடுத்து ஆஷஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ஆஷஸ் தொடரை சமன் செய்யும் அல்லது வெற்றிப் பெறும் சாத்தியங்களில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு எப்படியும் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்வது உறுதியாகியுள்ளது.

கடைசியாக ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸி அணி இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின் ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியவர்களால் முடியாத சாதனையை டிம் பெய்ன் நிகழ்த்தியுள்ளார்.