வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (06:37 IST)

ஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆசஷ் தொடரின் 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்து வருகிறது
 
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. ஸ்மித் அபாரமாக விளையாடி 211 ரன்கள் குவித்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
 
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 196 ரன்கள் அதிகம் எடுத்திருந்த ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
 
முதல் இன்னிங்சில் இரட்டை சதம் மற்றும் இரண்டாவது இன்னின்ங்சில் 82 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் 12ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது