பவுலிங் ஸ்டைலை மாற்றும் அஸ்வின்

Ashwin
Last Updated: வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (15:02 IST)
இந்திய வீரர் அஸ்வின் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் தன் பவுலிங் ஸ்டைலை மாற்ற உள்ளார்.

 
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்வின் சமீப காலமாக ஒருநாள் போட்டியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் தேர்வு செய்யப்படுகிறார். மூத்த வீரர்களான சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும் ஒருநாள் போட்டியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
 
2018ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அஸ்வினை ஏலத்தில் எடுக்கவில்லை. அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவில்லை என்பதால் அவரை அணியில் தேர்வு செய்யவில்லை என்று காரணம் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
பஞ்சாப் அணி அஸ்வினை ஏலத்தில் எடுத்தது. அவரை பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஸ்வின் தற்போது தனது பவுலிங் ஸ்டைலை முற்றிலுமாக மாற்ற உள்ளார்.
 
இதுவரை அஸ்வின் ஆப் ஸ்பின் பவுலிங் ஸ்டைலில் பந்து வீசி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் லெக் ஸ்பின்னுக்கு மாற உள்ளார். இதற்காக அவர் பயிற்சி எடுத்து வருகிறார். இந்திய ஒருநாள் அணியின் இடம்பிடிக்கவே இவர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :