ஐதராபாத்துக்கு 148 ரன்கள் டார்கெட் கொடுத்த மும்பை

Last Modified வியாழன், 12 ஏப்ரல் 2018 (22:01 IST)
ஐபிஎல் போட்டியின் 7வது ஆட்டமான மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் மும்பை பேட்டிங் செய்தது.

மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் யாதவ் மற்றும் பொல்லார்டு தலா 28 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்கள் ஆகும். ஐதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா, ஸ்டான்லேக், கெளல் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் ரஷித் கான், ஷாகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் 148 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணி சற்றுமுன் வரை ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்டுள்ளது. தவான் மற்றும் சஹா பேட்டிங் செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :