வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 மார்ச் 2018 (06:15 IST)

இலங்கைக்கு மீண்டும் ஒரு தோல்வி: பழிவாங்கியது இந்தியா

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு தொடர் போட்டியில் இன்று இந்தியா-இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. மேலும் மழை குறுக்கிட்டதால் 19 ஓவர் போட்டியாகவும் மாற்றப்பட்டது,

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தார்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிவாங்கி வெற்றி பெற்றது. 4  விக்கெட்டுக்களை வீழ்த்திய தாகுர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபப்ட்டுள்ளார். இரண்டு வெற்றிகள் பெற்ற இந்தியா தற்போது 4 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை மற்றும் வங்கதேசம் தலா ஒரு வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.