வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 அக்டோபர் 2018 (18:13 IST)

3வது ஒரு நாள் போட்டி: ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3வது ஒரு நாள் போட்டியில் ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 
இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி கடந்த 21ந் தேதி கவுகாத்தியில் தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து முன்னிலை வகித்தது. அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டையில் முடிந்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்து புதிய சாதனையை படைத்தார்.
 
இந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின்  ஆட்டக்காரரான சந்தர்பால் ஹேம்ராஜ் பும்ராவின் 5.5வது ஓவரில் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்ததாக 8.1வது ஓவரில் அதே பும்ரா ஓவரில் பொவெல் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். 10வது ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 46 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.