புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (05:59 IST)

ஆசிய கோப்பை: 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 83 ரன்களும் தவான் 40 ரன்களும் தோனி 33 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.