வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (09:07 IST)

பாரிஸில் கோலாகலமாக தொடங்கிய பாராஒலிம்பிக்! ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி சென்ற ஜாக்கிசான்!

Jackie Chan

பாரிஸில் பாராஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் தொடக்க விழாவில் ஜாக்கிச்சான் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி சென்றார்.

 

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் 184 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர்.

 

இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் 32 பெண் வீராங்கனைகள் உட்பட 84 பேர் கலந்து கொள்கிறார்கள். நேற்று பாராஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. வானில் ஒலிம்பிக் கொடியின் வண்ணங்களை புகையாக கக்கியபடி விமானங்கள் பறந்தன. பாராஒலிம்பிக் ஜோதி எடுத்து செல்லும் பேரணியில் பிரபல ஆக்‌ஷன் நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்டு ஜோதியை ஏந்தி சென்றார்.

 

இந்த தொடக்கவிழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை சுமித் ஆண்டில், பாக்கியஸ்ரீ ஜாதவ் ஏந்தி சென்றனர்.

 

Edit by Prasanth.K