திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (08:21 IST)

‘என்னுடைய இலக்கு அதுதான்’… கிறிஸ்டியானோ ரொனால்டோ நம்பிக்கை!

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது.

இந்நிலையில் அவர் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையை விரைவில் படைக்க உள்ளார். சவுதி ப்ரோ லீக் அணிக்கு எதிராக அவர் நேற்று அடித்த கோலின் மூலம் 899 கோல்கள் அடித்துள்ளார். இன்னும் ஒரே ஒரு கோல் அடித்தால் கால்பந்து உலகில் யாருமே படைக்காத சாதனையை அவர் படைக்கவுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள ரொனால்டோ “நான் விரைவில் 900 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பேன். ஆனால் என்னுடைய இலக்கு 1000 கோல்கள்தான். அப்போது எனக்கு 40 வயதாகி இருக்கும். 11 வயதில் இருந்தே இந்த உலகின் மிகச்சிறந்த கால்பந்துவீரன் நான்தான் என சொல்லிக்கொள்வேன். நான் எப்போதுமே உயர்வாக சிந்திப்பவன்” எனக் கூறியுள்ளார்.