திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:17 IST)

அது என் படத்தோட கெட்டப்… யாரும் பயப்பட வேண்டாம்- ஜாக்கி சான் பகிர்ந்த தகவல்!

உலகளவில் தன்னுடைய ஆக்‌ஷன் படங்களின் மூலம் ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர் ஜாக்கி சான். ஆனால் சமீபகாலமாக அவர் ஆக்‌ஷன் படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருகிறார். ஆனாலும் அவர் ரசிகர்களுக்காக அவர் சில படங்களில் நடிக்கிறார். அப்படி கடைசியாக அவர் நடித்த படம் தான் வான்கார்ட்.

அதன் பிறகு அவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்ல. இந்நிலையில் அவரின் சமீபத்தைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியிருந்தது. அதில் ஜாக்கி, மிகவும் உடல் நலிவுற்றவர் போல தோன்றியிருந்தார். இதையடுத்து அவரின் ரசிகர்கள் பீதியடைந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய அந்த புகைப்படம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதில் “அந்த புகைப்படம் என்னுடைய அடுத்த படத்துக்கான கெட்டப். நான் நலமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.