1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (18:29 IST)

டிவில்லியர்ஸ் அடித்த இமாலய சிக்ஸர் – பந்துடன் போஸ் கொடுத்த சிறுவன்!

நேற்று டிவில்லியர்ஸ் அடித்த சிக்ஸர் மைதானத்தை அடுத்து வெளியே சென்ற நிலையில் அந்த பந்தோடு ஒரு சிறுவன் போஸ் கொடுத்துள்ளது வேகமாகப் பரவி வருகிறது.

ஷார்ஜாவில் நடந்த நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 194 ரன்களை சேர்த்தது. இதில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிறிய மைதானமாக இருந்தாலும் அனைத்து பேட்ஸ்மேன்களுமே பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறினர். இதன் மூலம் அந்த அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கோலி உள்பட எல்லா பேட்ஸ்மேன்களும் சிக்ஸர் அடிக்க திணறிக் கொண்டு இருந்த நிலையில் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் மட்டும் 6 சிக்சர்களைப் பறக்க விட்டார். அதில் இரண்டு மைதானத்தை விட்டு வெளியே சென்று சாலையில் விழுந்தது. இந்நிலையில் இப்போது அந்த பந்தை கையில் வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது,