புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:49 IST)

நான் இன்னும் கொஞ்சம் சீக்கிரமே அவுட் ஆகி இருக்கலாம் – டிவில்லியர்ஸைப் பார்த்து மிரண்ட ஆரோன் பின்ச்!

நேற்றைய போட்டியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் பவுண்டரி எடுக்க முடியாமல் திணறிய போது டிவில்லியர்ஸ் மட்டும் பவுண்டரிகளாக பறக்க விட்டார்.

கோலி, பின்ச் என அனைவரும் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் ஒன்று மற்றும் இரண்டு என பொறுக்க டிவில்லியர்ஸ் மட்டும் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 33 பந்துகளில் 77 ரன்களை சேர்த்தார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் 194 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் பற்றிப் பேசிய பின்ச் ‘அவர் ஒரு ஸ்பெஷல் பேட்ஸ்மேன். அவரைப் போன்றவர்கள் பந்தை விளாசும்போது எல்லாவற்றையும் செய்ய முடியும். அது எதிரணிக்கு நெருக்கடியைக் கொடுக்கும். அவரின் ஆட்டம் ஆடுகளம் எளிமையானது என்பதைப் போல மாற்றிவிட்டது. நான் இன்னும் கொஞ்சம் சீக்கிரமே அவுட் ஆகி இருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.