நேற்று முழுவதும் 'தல' நாள்தான்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Last Modified வியாழன், 2 மே 2019 (06:47 IST)
தல அஜித் பிறந்த நாள் நேற்று காலை முதல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட் தல தோனியின் அதிரடி அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமானது
சினிமா தல அஜித்தின் பிறந்த நாளில் கிரிக்கெட் தல தோனியின் அதிரடி பேட்டிங் மற்றும் அபார ஸ்டெம்பிங் காரணமாக பெற்ற ஆட்டநாயகன் விருதால் நேற்று இரண்டு தல ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருந்தது. இருவரையும் ரசிக்கும் ரசிகர்களுக்கு நேற்று இரட்டை கொண்டாட்டம் தான். அதுமட்டுமின்றி சின்னத்தல ரெய்னாவின் அதிரடி ஆட்டமும் நேற்று சென்னை மைதானத்தில் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மொத்தத்தில் நேற்று சினிமா தல, கிரிக்கெட் தல, சின்னத்தல ஆகியோர்களுக்கான நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
'தல' என்று தோனியை ரசிகர்கள் அழைப்பதை ஒருசில அஜித் ரசிகர்கள் விரும்பாவிட்டாலும், கிரிக்கெட் ரசிகர்கள் முதல் வர்ணனையாளர்கள் வரை தோனியை தல என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள். இனி இதை நிறுத்துவது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். எனவே இனி அஜித்தை 'சினிமா' தல என்றும், தோனியை 'கிரிக்கெட்' தல என்றும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டிய நிலை உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :