தொடர்புடைய செய்திகள்
- முதலிடத்தை பிடிக்க போறது யாரு? – ராயல் சேலஞ்சர்ஸ் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்!
- இந்த இருவருக்கு இன்னும் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை… குழப்பத்தில் ரசிகர்கள்!
- நம்ம டீம் விக்கெட் இல்லாம வின் பண்ணுச்சா பாருங்க! சிஎஸ்கேவால் கதிகலங்கிய ரசிகர்கள்!
- சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு: இன்றாவது வெற்றி பெறுமா?
- மீண்டும் அணியில் கேதார் ஜாதவ்: தொடரும் தோனியின் பிடிவாதம்
ஐபிஎல் தொடரில் தல தோனியின் இரண்டு புதிய சாதனைகள்!
ஐபிஎல் தொடரில் தல தோனியின் இரண்டு புதிய சாதனைகள்!
ஐபிஎல் தொடர் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இடையில் இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்ட ஆண்டுகள் தவிர மீதி உள்ள 11 ஆண்டுகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருந்துள்ளார். இதுவரை எந்த ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனும் பதினோரு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரே அணியின் கேப்டனாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் தல தோனியின் புதிய இரண்டு சாதனைகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் தொடரில் அதிக வீரர்களை அவுட்டாகி வெளியேற்றிய விக்கெட் கீப்பர் பட்டியலில் தல தோனி முதலிடத்தில் உள்ளார். அவர் 139 விக்கெட்டுகளை கேட்ச் மூலம் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் 100 கேட்சுகளை பிடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்னும் சாதனையையும் மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.இந்த இரண்டு சாதனைகளை அடுத்து தல தோனியின் ரசிகர்கள் அவரை டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்
தல தோனி ஏற்கனவே பல்வேறு சாதனைகள் செய்துள்ள நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு சாதனைகள் செய்து உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
அடுத்த கட்டுரையில்
