செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (10:28 IST)

நம்ம டீம் விக்கெட் இல்லாம வின் பண்ணுச்சா பாருங்க! சிஎஸ்கேவால் கதிகலங்கிய ரசிகர்கள்!

நேற்றைய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றி மற்ற அணி ரசிகர்களை கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த மூன்று போட்டிகளாக தோல்வியை சந்தித்து வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் அணி 20 ஓவருக்கு 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களமிறங்கிய சிஎஸ்கேவின் தொடக்க பேட்ஸ்மேன்களான வாட்சன், டூ ப்ளசிஸ் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் மைதானத்தில் தீபாவளியே நடத்தி விட்டார்கள். விக்கெட்டுகளை இழக்காமல் தொடர்ந்து விளையாடிய அவர்கள் ஆளுக்கொரு அரைசதத்தை கொள்முதல் செய்து கொண்டதுடன், 17.4 ஓவரில் 181 ரன்கள் குவித்து வெற்றிப்பெற்று ஆட்டத்தை நிறைவு செய்தனர்.

இதுவரையிலான 12 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விக்கெட்டுகளே விழாமல் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளதாக அதன் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் மற்ற அணி ரசிகர்கள் தங்கள் அணியும் இதுபோல விக்கெட்டுகள் விழாமல் முன்னர் வெற்றி பெற்றிருக்கின்றனவா என்று தேட தொடங்கியுள்ளார்களாம். ஐபிஎல் தரவரிசை அட்டவனையில் கடைசியாக 8வது இடத்தில் இருந்த சிஎஸ்கே நேற்றைய ஆட்டத்தின் வெற்றி மூலமாக 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.