வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (21:28 IST)

சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு: இன்றாவது வெற்றி பெறுமா?

சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு: இன்றாவது வெற்றி பெறுமா?
இன்று நடைபெற்று வரும் பதினெட்டாவது ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து அந்த அணி களத்தில் இறங்கி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ராகுல் 63 ரன்கள், பூரன் 33 ரன்கள் எடுத்தனர்
 
இந்த நிலையில் 179 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கவுள்ளது. டூபிளஸ்சிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று சென்னை அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நிலையில் அந்த வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்