வியாழன், 22 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (09:08 IST)

கண்ணன் தேவன் டீ குடியா? என்ன ஆட்டம் போட்டீங்க? – ட்ரெண்டான #EeSalaCupNamde

கண்ணன் தேவன் டீ குடியா? என்ன ஆட்டம் போட்டீங்க? – ட்ரெண்டான #EeSalaCupNamde
நேற்றைய ஐபிஎல் தகுதி சுற்று ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில் ட்விட்டரில் #EeSalaCupNamde ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் இரண்டாவது சுற்றில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப்க்கு முன்னேறியதும், ஆர்சிபி ரசிகர்கள் “ஆடாம ஜெயிச்சோமடா” என மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ப்ளே ஆஃபில் சன் ரைஸர்ஸுடன் மோதிய ஆர்சிபி பெரும் தோல்வியை அடைந்துள்ளது.

பெரிதும் எதிர்பார்த்த விராட் கோலி, படிக்கல் பேட்டிங்கில் சொதப்பிவிட டி வில்லியர்ஸ், பின்ச் முடிந்த அளவு ரன் ரேட்டை கூட்டினார்கள். ஆனால் சன்ரைஸர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய வில்லியம்சன், ஹோல்டர் வெற்றியை சன் ரைசர்ஸுக்கு சாதகமாக்கினர்.

இந்நிலையில் ஆர்சிபி ரசிகர்களை கிண்டலடிக்கும் விதமாக #EeSalaCupNamde என்ற ஹேஷ்டேகை மற்ற அணி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக ஆர்சிபி ரசிகைகள் சிலர் “கண்ணன் தேவன் டீ குடி.. சிஎஸ்கே புடி புடி” என்று சிஎஸ்கேவை கிண்டலடித்து டான்ஸ் ஆடிய படங்களையும் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். அதே சமயம் ஆர்சிபி தோற்பது புதிதல்ல. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து போராடி கொண்டே இருப்போம் என ஆர்சிபி ரசிகர்களும் கிண்டல்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.