உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரருக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி

உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரருக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி
Last Updated: செவ்வாய், 23 ஜூன் 2020 (19:29 IST)
உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரருக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி
உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவால் ஜோகோவிச் அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது
இதுகுறித்து நோவால் ஜோகோவிச் வெளியிட்ட அறிக்கையில், தனக்கும் தனது மனைவி
ஜெலினாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் கூறியுள்ளார். 14 நாட்கள் தனிமைப்படுத்துதால் காலம் முடிந்த 5 நாளுக்குப் பின் மீண்டும் பரிசோதனை செய்யப்போவதாகவும் நோவக் கூறியுள்ளார்
முன்னதாக அட்ரியா டூர் என்ற டென்னிஸ் தொடர் செர்பியா, குரோஸியா ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டியில் ஜோகோவிச் மற்றும் டிமிர்ட்ரோ ஆகியோர் மோத இருந்தனர். ஆனால் துருதிஷ்டவசமாக போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன் டிமிர்ட்ரோவுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :