செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (15:23 IST)

பேருந்திலிருந்து இறங்கிய அலறியடித்து ஓடிய பயணிகள்: கொரோனா ஏற்பட்ட அச்சமா?

கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலால் அந்த பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து வடலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 54 வயது நபர் ஒருவருக்கு திடீரென சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இருந்து போன் வந்தது. அந்த போனில் அவர் பேசிக்கொண்டிருந்த போது சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர் 
 
இதனை அடுத்து அவர் பேருந்திலேயே அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் நேராக கண்டக்டரிடம் சென்று தனக்கு கொரோனா இருப்பதாகவும் அதனால் தன்னை இறக்கி விடுமாறு கூறினார். இந்தத் தகவலை அறிந்த மற்ற பயணிகள் அலறி அடித்துக் கொண்டு அந்த பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார்கள். அதன் பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த பேருந்திலிருந்த கொரோனா நோயாளியையும் அவருடைய மனைவியையும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
 
அதன் பிறகு அந்த பேருந்து பணிமனைகள் எடுத்துச் செல்லப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது