1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (13:04 IST)

3வது டெஸ்ட்: ஆடும் 11 அணியில் நடராஜன் பெயர் இல்லை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஏற்கனவே இரண்டு டெஸ்டுகள் முடிவடைந்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்தது. இந்த நிலையில் நாளை சிட்னியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது 
 
இந்த டெஸ்ட் போட்டியில் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவர் ஆடும் 11 பேரணிகள் இருப்பார் என்று தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் சற்று முன் நாளை விளையாட இருக்கும் இந்திய அணியின் 11 பேர் கொண்ட பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் நடராஜனின் பெயர் இல்லாதது தமிழர்கள் அனைவருக்கும் பெரும் ஏமாற்றமாக உள்ளது
 
மேலும் இந்த அணியில் நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டியில் நாளை அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி நன்றாக விளையாடிக் கொண்டிருந்த மயங்க் அகர்வால் இந்த அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளை விளையாட உள்ள இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் 11 பேர் வீரர்கள் பின்வருமாறு: ரஹானே, ரோஹித் சர்மா, கில், புஜாரே, விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ் மற்றும் சயினி