இந்தியா முழுவதும் பரவிய பறவைக்காய்ச்சல்! – அவசர நடவடிக்கையில் மத்திய அரசு!
கேரளாவில் கண்டறியப்பட்ட பறவைக்காய்ச்சல் தற்போது மேலும் சில மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கொரோனா பாதிப்பிலிருந்தே இன்னும் மீண்டு வராத சூழலில் கேரளாவில் பரவ தொடங்கியுள்ள பறவை காய்ச்சல் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பறவைக்காய்ச்சலை கண்காணிக்க டெல்லியில் மத்திய அரசு கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்படும் பறவைகள் விவரங்கள் மற்றும் மாதிரிகளை மாநில சுகாதாரத்துறை சேகரித்து உடனுக்குடன் அனுப்பி வைக்கவும், அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவு வெளியாகியுள்ளது. இதனால் தேசிய அளவில் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.