தொடர்புடைய செய்திகள்
- எனது மகனின் முதல் விமானப்பயணம் - பிரபல கிரிக்கெட் வீரரின் வைரல் போட்டோ
- கிரிக்கெட்டில் இளம் வயதில் இப்படி ஒரு சாதனையா??? குவியும் பாராட்டுகள் !
- இந்தியா வரும் இங்கிலாந்து அணி: டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி அட்டவணை!
- மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சர் ஆகிறதா விவோ? – பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்!
- இனி மாதம்தோறு கிரிக்கெட் வீரர்களுக்கு விருது… ஐசிசி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இன்று சென்னை வரும் இந்திய வீரர்கள்!
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி எதிர்வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டம் 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்திலிருந்து முன்கூட்டியே வரும் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர். அதன்படி இங்கிலாந்து வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்திய காலம் முடிவடைந்த பின்னர் ஒன்றாக இணைந்து பயிற்சி மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா, ஷர்துல் தாக்கூர் மற்றும் ரஹானே ஆகியோர் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். கோலி உள்ளிட்ட மற்ற வீரர்கள் இன்று மாலைக்குள் சென்னை வர உள்ளனர். அவர்கள் அனைவரும் கொரோனா சோதனைக்குப் பின்னர் பயோ பபுளில் வைக்கப்பட உள்ளனர்.
