திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (17:18 IST)

எனது மகனின் முதல் விமானப்பயணம் - பிரபல கிரிக்கெட் வீரரின் வைரல் போட்டோ

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடைபெற்றது.

இந்த நட்சத்திரத் தம்பதிக்கு  கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த தகவலை ஹர்திக் பாண்ட்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.hardikpandya

இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டெஸ்ட் போட்டியில்  வெற்றி பெற்ற நிலையில் அவர் உற்சாமாகக் காணப்படுகிறார்.

இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

எனது மகனின் முதல் விமானம் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் லைக்குகள் குவித்து வருகின்றனர்.

மேலும், டி-20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா வென்றபோது, கோப்பையை நடராஜனிடம் கொடுத்து அவருக்குப் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.