1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Vivo again as IPL Title Sponcer

மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சர் ஆகிறதா விவோ? – பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்!

IPL
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை விரைவில் நடத்தவுள்ள நிலையில் மீண்டும் விவோ நிறுவனம் ஸ்பான்சராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ஐபிஎல் டி20 போட்டிகளை கடந்த சில வருடங்களாக விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது. கடந்த ஆண்டு சீனா – இந்தியா இடையேயான பிரச்சினையால் சீன நிறுவனமான விவோ டைட்டில் ஸ்பான்சராக தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விவோ விலகிய நிலையில் ட்ரீம்11 ஸ்பான்சராக இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல்லில் மீண்டும் விவோ டைட்டில் ஸ்பான்சராக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐயுடன் விவோ விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick