புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலும் ஒரு வெற்றி

Last Modified செவ்வாய், 20 நவம்பர் 2018 (21:59 IST)
கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். புள்ளிகள் மாறி மாறி முன்னிலை பெற்றதால் இறுதி வரை வெற்றி யாருக்கு என்ற த்ரில் பார்வையாளர்களுக்கு இருந்தது.

இந்த நிலையில் கடைசி சில நிமிடங்களில் பொறுப்புடன் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 27-23 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இருப்பினும் அந்த அணி 20 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி 40 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட்னா 33 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பெங்கால் 31 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :