செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (00:25 IST)

புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலும் ஒரு தோல்வி

புரோ கபடி போட்டிகளின் லீக் போட்டிகளில் இன்று பாட்னா மற்றும் டெல்லி அணிகளும், மும்பை மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளும் மோதின.

மும்பை மற்றும் தமிழ்தலைவாஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே மும்பை அணியின் கை ஓங்கியிருந்தது. எந்த இடத்திலும் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளில் முன்னணியில் இல்லை. இறுதியில் மும்பை அணி 36-22 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி கிடைத்துள்ளதால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்கிறது.

அதேபோல் இன்று நடந்த இன்னொரு போட்டியான பாட்னா-டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இறுதி வரை யாருக்கு வெற்றி என்ற சஸ்பென்ஸ் இந்த ஆட்டத்தில் இருந்த நிலையில் இறுதியில் பாட்னா அணி 38-35 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.