தமிழ் தலைவாஸ்-ஹரியானா: சமனில் முடிந்த பரபரப்பான ஆட்டம்

Last Modified வியாழன், 15 நவம்பர் 2018 (07:19 IST)
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா அணிகள் மோதின

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடியதால் புள்ளிகள் மாறி மாறி கிடைத்தன. முதல் பாதியின் முடிவில் ஹரியானா 19-15 என்ற நிலையில் முன்னிலை பெற்றிருந்தாலும் இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் சுதாரித்து ஆடியதால் அதிக புள்ளிகள் கிடைத்தது.


இறுதியில் இரு அணிகளும் 32-32 என்ற புள்ளிகளை எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. எனவே இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் அளிக்கப்பட்டது. தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளுடன் பி பிரிவின் கடைசி இடத்தில் உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :