தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி: 7 புள்ளி வித்தியாசத்தில் ஹரியானாவை வென்றது

Last Modified ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (22:48 IST)
இன்று நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டி ஒன்றில் தமிழ் தலைவாஸ் மற்றும் அரியானா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி, குறைவான புள்ளிகளைப் பெற்று இருந்தாலும் இரண்டாவது பாதியில் சுதாரித்து விளையாடி அதிக புள்ளிகளைப் பெற்றது. இதனை அடுத்து இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளும், அரியானா அணி 28 புள்ளிகளையும் பெற்றதால் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் ராகுல் சவுத்ரி 14 புள்ளிகளை பெற்றுக் கொடுத்து தனது அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்

இதனையடுத்து இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் புனே அணி பாட்னா அணியை வீழ்த்தியது. ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த புனே 41 புள்ளிகள் பெற்றது. ஆனால் பாட்னா அணி 20 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் புனே அணி 21 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டியின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் ஜெய்ப்பூர், மும்பை ம்ற்றும் டெல்லி அணி முதல் மூன்று இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :