புரோ கபடி போட்டி 2019: பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி!

புரோ கபடி போட்டிகள் இரண்டு வாரங்கள் முடிவடைந்து நேற்று மூன்றாவது வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா அணியும் பெங்களூரு மற்றும் பெங்கால் அணிகளும் மோதின

இதில் முதல் போட்டியில் ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பாட்னா அணி விறுவிறுப்பாக விளையாடிய போதிலும் ஜெய்ப்பூர் அணி அதிரடியாக விளையாடி 34 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. பாட்னா அணியால் 21 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது என்பதால் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
இதனை அடுத்து இரண்டாவது போட்டியில் பெங்களூரு மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஆரம்பத்தில் இருந்து கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இரு அணி வீரர்களும் சமபலத்தில் விளையாடினர்

இறுதியில் பெங்கால் அணி 42 புள்ளிகளும், பெங்களூர் அணி 43 புள்ளிகளும், எடுத்ததால் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின்னர் ஜெய்ப்பூர் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது மும்பை அணி 17 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் டெல்லி அணி 16 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது

இன்று தமிழ் தலைவாஸ் மற்றும் அரியானா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :