புரோ கபடி போட்டி: முதல்முறையாக 'டை' ஆன போட்டி

Last Modified வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (22:22 IST)
கடந்த இரண்டு வாரங்களாக புரோ கபடி போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் போட்டியில் உத்தரப்பிரதேச அணியும் தெலுங்கு டைட்டான்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே இரு அணிகளும் விறுவிறுப்புடன் விளையாடி வந்த நிலையில் இறுதியில் இரு அணிகளும் தலா 20 புள்ளிகள் எடுத்து போட்டியை டிரா செய்தது. கடைசி வரையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற த்ரில் இருந்தால் இந்த போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு நல்ல அனுபவம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே மும்பை அணி கை ஓங்கி வந்ததால் அந்த அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் அணியால் 20 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியின் முடிவில் மும்பை அணி 17 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. இரண்டாமிடத்தில் டெல்லி அணி 16 புள்ளிகளும் மூன்றாமிடத்தில் ராஜஸ்தான் அணி 15 புள்ளிகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
நாளை ஜெய்ப்பூர்-பாட்னா அணிகளும், பெங்களூரு-பெங்கால் அணிகளும் மோதவுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :