1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (23:07 IST)

மீண்டும் ஒரு புள்ளியில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்: ரசிகர்கள் அதிருப்தி

கடந்த இரண்டு வாரங்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் பாட்னா அணியும் மோதியது. இந்த போட்டி வழக்கம்போல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் வழக்கம்போல் தமிழ் தலைவாஸ் அணி ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் தமிழ் தலைவாஸ் ரசிகர்களை பெரும் அதிருப்தி அடைந்தனர். தமிழ் தலைவாஸ் அணி 23 புள்ளிகளையும் பாட்னா அணி 24 புள்ளிகளையும் எடுத்தனர்
 
இதனை அடுத்து நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்கால் அணியும் புனே அணியும் மோதின. இதில் பெங்கால் அணியின் அணியின் ஆதிக்கம் ஆரம்பத்திலிருந்தே இருந்ததால் அந்த அணி 43 புள்ளிகளை எடுத்தது. ஆனால் அதனை எதிர்த்து ஆடிய புனே அணியால் 23 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து பெங்கால் அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி அணி 15 புள்ளிகளும் பெங்கால், பாட்னா, மும்பை அணிகள் 11 புள்ளிகளும் குஜராத், ஜெய்ப்பூர் அணிகள் 10 புள்ளிகளும் பெற்றுள்ளன என்பதும் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது