புரோ கபடி 2019: டெல்லியை வீழ்த்தியது குஜராத்

Last Modified வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (20:55 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே குஜராத் கை ஓங்கியிருந்த நிலையில் இறுதியில் 31 புள்ளிகள் எடுத்து குஜராத் அணி வெற்றிபெற்றது. டெல்லி அணி 26 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இன்றைய போட்டியில் குஜராத் அணி ரெய்டில் 17 புள்ளிகளும்,டேக்கிளில் 10 புள்ளிகளும், ஆல் அவுட் மற்றும் இதர வகையில் தலா இரண்டு புள்ளிகளும் பெற்றது. அதே போல் டெல்லி அணி
ரெய்டில் 13 புள்ளிகளும்,டேக்கிளில் 9புள்ளிகளும், ஆல் அவுட் மற்றும் இதர வகையில் தலா இரண்டு புள்ளிகளும் பெற்றது.

இன்றைய போட்டியில் நவீன் குமார் தனது குஜராத் அணிக்கு 10 புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்த போதிலும் டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி மொத்தம் 16 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :