புரோ கபடி 2019: ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி!

Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (21:15 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் அணியும் டெல்லி அணியும் மோதின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி 30 புள்ளிகளையும், தமிழ் தலைவாஸ் 29 புள்ளிகளையும் எடுத்ததால் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது

இன்றைய போட்டியில் டெல்லி அணி ரைடுகளில் 13 புள்ளிகளையும், டேக்கில் பாயிண்டில் 9 புள்ளிகளையும், ஆல் அவுட் மூலம் 2 புள்ளிகளையும், எக்ஸ்ட்ராவாக 6 புள்ளிகளையும் பெற்றது. அதேபோல் தமிழ் தலைவாஸ் அணி ரைடுகளில் 12 புள்ளிகளையும், டேக்கில் பாயிண்டில் 12 புள்ளிகளையும், ஆல் அவுட் மூலம் 2 புள்ளிகளையும், எக்ஸ்ட்ராவாக 3 புள்ளிகளையும் பெற்றது.
ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது தமிழக கபடி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தனது திறமையை நிரூபித்து அதிக வெற்றிகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இன்றைய போட்டியில் முடிவிற்கு பின்னர் டெல்லி அணி இரண்டு வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணி 5 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :